புரட்சிகள் என்னில் ஆரம்பம்
உள்ளடக்கம்  
  நுழைவாயில்
  மக்கள் சக்தி இயக்கம்
  என் குமுறல்கள்
  நான் ரசித்தவை
  கருத்துக் கணிப்பு
  தொடர்புக்கு
  உங்கள் கருத்துக்களை பதிவுச்செய்ய.
நுழைவாயில்

First Time Readers need to download Tamil Font : font problem ? or
font tamil ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

-பாவேந்தர் பாரதிதாசன்

வணக்கம், அனைவரையும் பாரதிதாசன் அவர்களின் கவிதைத்துளி தெளித்து இந்த இணையப்பக்க வரவேற்பு அறைக்கு வரவேற்கிறேன்.

எதை மனித மனம் கற்பனையில் உருவாக்குகிறதோ, நம்புகிறதோ அதை அதனால்அடைய முடியும். இது எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் கூற்று.

ஆம் நம் மனஎண்ணங்களின் வெளிப்பாடு தான் நாம் செய்யும் செயலில் அரங்கேற்றப்படுகிறது.இதனால் தான் நம் முதல்குடிமனும் நம்மைக் கனவுகாண சொன்னார்.ஆனால் காலவரையறை இல்லாத கனவுகளும், திட்டங்களும்்் வெறும் கற்பனைகளே.நாம் கானும் கனவுகளை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

நாம் செய்யும் எந்த செயலிலும்,பணியிலும் ஒரு சமூகப்பார்வையும்,சமூகஅக்கறையும் வேண்டும். எந்த ஒரு நல்ல செயலும் ஏன் நம்மிலிருந்து தொடங்கக் கூடாது? என்ற எண்ணம் வேண்டும். முடியாததற்கு காரணம் முயலாததே.அனைவருக்கும் தற்போதைய தேவை ஒரு தொலைநோக்குப் பார்வை.நம் சமூகம் ஒரு வளர்ச்சி அடைந்த பாதையை நோக்கி முன்னேறுகையில் நமது பங்கு அதில் நிச்சயம் தேவை.

நாம் சோர்வடைய என்ன காரணம்? ஓடத் தொடங்கும் முன்பே களைத்துப் போவது என்ன நியாயம்? என்ற வினா எழுப்பினார் திரு.சு.ப.வீரபாண்டியன் அவர்கள். ஆம் நாம் சோர்வடைவதில் நியாயம் இல்லை.நம் இளையர்கள் எனும் நெருப்பை எந்த கரையானும் அரிக்க இயலாது.நம் இளயர்களின் எழுச்சி பார்லிப்பூ(ஒரு நிமிடம் பூத்து மறு நிமிடம் வாடும் பூ) மாலையை போல ஆகாமல் நிலைத்து நின்று வாசம் வீசவேண்டும்.

தமிழோடுஉயர்வோம் ...தமிழராக என்றான் நம் கவிஞன்.ஆம் பாரதிதாசன் அவர்கள் கூறியது போன்று நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!. தமிழ்ப்பணியையும் ஒரு சமூகப்பார்வையுடன் செயலாக்குவோம்.இப்பொழுது ஆஸ்திரேலியா,ஐரோப்பா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பணிப்புரியச் செல்ல வேண்டுமெனில் IELTS (International English Language Testing System) எழுத வேண்டும்.வரும் காலத்தில் நிச்சயம் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிவதக்கு நம் தமிழ்நாட்டை நோக்கி வருவார்கள். அவர்களுக்கு கட்டாயமாக                 த.மொ.தே.(தமிழ் மொழி தேர்வு) வைக்கப்படும். 

இந்த சோதனை முயற்சி என் சகோதர சகோதரிகளின் இதயங்களை பதம்பார்க்க அல்ல, பழுதுபார்க்க.இதில் இடம்பெற்ற  செய்தி அனைத்தும்  என்        எண்ணக்குமுறல்களே!.சொற்பிழைகளையும் பொருட்பிழைகளையும் மன்னித்தருளவும்.

என்னை குட்ட வேண்டிய இடத்தில் குட்டியும், தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டியும் உங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


தொடரும் இந்த பயணம்..............
நான் பயணிக்க,பயணச்சீட்டுத் தந்த என் பெற்றோருக்கு இதை காணிக்கையாக்குகிறேன்!.

            இதமுடன்,

           இரா.பிரவீன் குமார்.

 

அறிமுகம்  
  [umfrage]  
Today, there have been 3 visitors (105 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free